
முன்னாள் இராணுவத்தளபதியும், கூட்டுப்படைகளின் பிரதானி சரத்பொன்சேகாவின் கைது, இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் சமூகங்களிடையே பாரிய பிளவுகளுக்கு வழிவகுக்கும் என அமெரிக்கா அச்சம் வெளியிட்டுள்ளது.
சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமரிக்காவின் ராஜாங்க திணைக்கள பேச்சாளர் பிலிப் கிரௌலி, அமரிக்கா இலங்கையின் நிலைமை தொடர்பாக அவதானித்து வருவதாக குறி;ப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையின் சட்டங்களுக்கு உட்பட்ட நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இலங்கை அரசாங்கம், சமூகத்தி;ல் ஏற்படும் அமைதியின்மையை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் கோரியுள்ளார்.
சரத் பொன்சேகாவின் கைது, இலங்கையில்; சமூகங்களிடையே பிளவுகளை ஏற்படுத்தாதவாறு கவனித்துக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இலங்கை அரசாங்கம், ஜனநாயக விழுமியங்களுக்கு இடம்கொடுக்கவேண்டும் எனக்கேட்டுள்ள அவர், தேர்தலின் போது இந்த கைது நடவடிக்கை தேவையற்ற செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா, அமெரிக்காவின் கிரீன்காட் வதிவிட அனுமதியை கொண்டுள்ள நிலையில் இந்த கருத்தை அமெரிக்கா வெளியிட்டிருப்பது இலங்கையின் அரசியல் மட்டத்தில் விமர்சனங்களை கொண்டு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.














