Top 10 National-World News: மம்தா அரசுக்கு வலுக்கும் நெருக்கடி, பலூசிஸ்தானில் தாக்குதலுக்கு சீனா கண்டனம்.. மேலும் விவரம்-today 27 august 2024 top 10 national world news read full details to know more
Tamil Top News Today: தேசம் முதல் சர்வதேசம் வரை இன்று நடந்த டாப் 10 செய்திகளை இந்தத் தொகுப்பில் பார்ப்போம். கொல்கத்தாவில் ஆர்.ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு தொடர்பான ‘நபன்னா அபிஜன்’ பேரணியில் பங்கேற்ற போராட்டக்காரர்கள் மீது போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பாஜக விமர்சித்துள்ளது. “அரசியலமைப்பு கழுத்து நெரிக்கப்படுகிறது. ‘ சர்வாதிகாரி மம்தா பானர்ஜி குற்றவாளிகளுக்கு பதிலாக மாணவர்களை குறிவைக்கிறார், இருப்பினும் இண்டி கூட்டணி அமைதியாக உள்ளது” என்று பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறினார்.