Saturday, September 23, 2023
Health

“பிஞ்சு”க்காய் செய்யும் மேஜிக்.. சடார்னு “வெயிட் குறையுதாமே.. அந்த “நீர்க்காய்” பெயர் என்ன தெரியுமா? | Health amazing benefits of Cucumber and do you know Cucumber is the Best Health food for weight


Health

oi-Hemavandhana

Google Oneindia Tamil News

சென்னை: வெள்ளரிக்காய் பற்றி சொல்வதானால், நீண்டுகொண்டே போகும்.. அந்த அளவுக்கு ஆரோக்கிய நன்மைகள் இந்த வெள்ளரிக்காயில் உள்ளன.. குறிப்பாக வெள்ளரிப்பிஞ்சுவில் உள்ள சத்துக்கள் மலைக்க வைக்கிறது.

விலை குறைவான காய்தான்.. எல்லா காலமும் கிடைக்கக்கூடிய காய்தான்.. எல்லாருக்குமே எளிதாக கிடைக்கக்கூடிய காய்தான்.. ஆனாலும், இதன் நன்மைகளை அறியாமல் பலர் கடந்து சென்றுவிடுகிறார்கள்.. கிட்டத்தட்ட இதுவும் இளநீரை போலதான். நீர்க்காய் வகைகளில் ஒன்று.

இதை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதுதான் நல்லது.. உடலுக்கு குளிர்ச்சியானது.. சமைத்து சாப்பிட்டால், இதிலுள்ள பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்துவிடுகிறது.

Health amazing benefits of Cucumber and do you know Cucumber is the Best Health food for weight

சத்துக்கள்: வெள்ளரிக்காயில் மெக்னீசியம், நார்ச்சத்து. பொட்டாசியம் நிறைந்துள்ளன.. 100 கிராம் வெள்ளரிக்காயில், 96 சதவீதம் ஈரப்பதம் இருக்கிறது.. மற்ற 4 சதவீதத்தில் உயர்தரமான புரதம், கொழுப்பு, மாவுச்சத்து,தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் “பி’ போன்றவை உள்ளன.. ஓரளவு வைட்டமின் “சி’யும் இருக்கிறது.

உடல்எடை: உடல் எடை குறைக்க வேண்டுமானால், இந்த காயை தாராளமாக சாப்பிடலாம்.. இதில் கலோரிகள் மிக மிக குறைவு என்பதால், உடல் எடையை குறைக்க பேருதவி புரிகிறது. வெள்ளரி பிஞ்சுவில் நார்ச்சத்து நிறைய இருக்கிறது. இதை சாப்பிடும்போது, வயிறு நிரம்பி நீண்ட நேரம் பசி எடுக்காது… அத்துடன் தொப்பையை குறைக்கவும் இந்த காய் உதவுகிறது. மதிய அல்லது இரவு ஏதாவது ஒருவேளையில், வெள்ளரிக்காய் மற்றும் வெள்ளரி பிஞ்சு சாலட் செய்து சாப்பிட்டால், தொப்பை குறையும் என்கிறார்கள்.

இந்த காயில், ஸ்டேரோல் என்ற பொருள் இருப்பதால், நம்முடைய உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை குறைய செய்கிறது.. வெள்ளரிக்காயில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. ரத்த அழுத்த அளவை பராமரிக்கிறது… அதனால்தான் பிபி உள்ளவர்களுக்கு இந்த காயை நிறைய சாப்பிட சொல்வார்கள்.. அதிலுள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

ஒரே ஒரே “இலை”யில் ஓராயிரம் ஆச்சரியம்.. சர்க்கரை நோயாளிகளின் “இனிப்பு ரசம்” இதான்.. இலைய விட்றாதீங்க

இதயநோய்: இதய நோய் அபாயத்தை குறைத்தல், ஆரோக்கியமான எடை மேலான்மை, உடலை நச்சுத்தன்மையிலிருந்து வெளியேற்றுதல், கண் ஆரோக்கியத்தை பராமரித்தல் ரத்தத்தை சுத்தம் செய்தல் மற்றும் புற்றுநோய்க்கு சிகிச்சையளித்தல் போன்ற நன்மைகளும் வெள்ளரிக்காயில் உண்டு.. சிறுநீர் பாதை எரிச்சல், சிறுநீரக கல் போன்றவற்றுக்கு வெள்ளரிக்காய் விதைகள் அதிக நன்மை அளிக்கிறது.

சிறுநீர் பிரிவைத் தூண்டசெய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தும் ஆற்றல் இந்த காய்க்கு உண்டு. பித்தம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட கோளாறுகளை நீக்கக்கூடியது இந்த காய்.. நோய் எதிர்ப்பு சக்தியையும், ஆற்றலையும் அதிகரிக்க செய்யும்..

எலும்புகள்: பலவீனமான எலும்புகளை வலுப்படுத்துகிறது.. வெள்ளரிக்காயை மென்று சாப்பிடுவதன் மூலம் வாய் துர்நாற்றம் சரியாகும். ஆயுர்வேதத்தில், வெள்ளரிக்காய்க்கு முக்கியத்துவம் அதிகம் உண்டு.. இந்த காயின் சாறு உடலில் ஏற்படும் எரிச்சலை நீக்குகிறது. வெள்ளரி விதை முதல் வெள்ளரி இலை வரை அத்தனையும் மருத்துவம்தான்.. தயிரில் இந்த வெள்ளரி விதைகளை கலந்து சாப்பிட்டால் சிறுநீர்க்குழாயில் உள்ள கல்லை கரைக்கிறதாம்..

அழகு தயாரிப்பில் வெள்ளரிக்காயின் பங்கு அபாரமானது.. வெள்ளரிக்காயை மசித்து கூழாக்கி, முகத்துக்கு போடும் ஃபேஸ் பேக் தயார் செய்கிறார்கள்.. ஆனால், இதை நாமும் வீட்டிலேயே எளிய முறையில் செய்து கொள்ளலாம்..

சுருக்கங்கள்: வெள்ளரிக்காய் விழுதை, முகம், கண்கள், கழுத்துப்பகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், அவ்வளவும் சருமத்துக்கு சிறப்பு .. இதனால் பருக்கள், கரும்புள்ளிகள் நீங்குகின்றன.. சருமத்தில் உள்ள சுருக்கங்களும் மெல்ல மறைகிறது. தூக்கம் வராமல் தவிப்பவர்கள், இந்த வெள்ளரிக்காய் துண்டுகளை தலையின் மீது வைத்து கொண்டால், தூக்கம் வர செய்யுமாம்.. விலைமலிவான எளிமையான காய்தான், ஆனாலும் ஆச்சரியங்களை குவித்து வைத்திருக்கிறது!!

English summary

Health amazing benefits of Cucumber and do you know Cucumber is the Best Health food for weight

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *