Top 10 National-World News: சித்தராமையா மீது அமலாக்கத் துறை வழக்கு பதிய வாய்ப்பு.. நடிகரின் போட்டோவுடன் போலி ரூபாய்-today 30 september 2024 top 10 national world news read full details
மைசூரு நகர மேம்பாட்டு ஆணைய (முடா) ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்க இயக்குநரகம் வழக்குப் பதிவு செய்யக்கூடும் என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் லோக் ஆயுக்தா போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் சித்தராமையா, அவரது மனைவி பி.எம்.பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி மற்றும் தேவராஜு ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.