‘தெற்கு லெபனானை விட்டு உடனடியாக வெளியேறவும்’ – இஸ்ரேல் மீண்டும் எச்சரிக்கை
ஜெருசலேம்: தெற்கு லெபனானில் உள்ள இரண்டு கிராமங்களில் உள்ள மக்கள் தங்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக வீடுகளைவிட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் மீண்டும் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஹிஸ்புல்லாக்களின் நடவடிக்கை, இஸ்ரேல் ராணுவத்தை அதற்கு எதிராக செயல்படத் தூண்டியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் உங்களை (கிராமத்தினரை) துன்புறுத்த விரும்பவில்லை. உங்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக உங்கள் வீடுகளை விட்டு நீங்கள் உடனடியாக வெளியேற வேண்டும். ஹிஸ்புல்லாக்களின் நடமாட்டம், அவர்களின் இடங்கள், ஆயுதக் கிடங்குகளுக்கு அருகில் இருப்பவர்கள் தங்களின் உயிரை பணையம் வைக்கிறார்கள் என்று பொருள்” என்று தெரிவித்துள்ளார்.