Friday, December 8, 2023
Health

டிஐஜி விஜயகுமார் உயிரை பறித்த OCD? இந்த பிரச்சனை இவ்வளவு சீரியஸா? ஓசிடி என்றால் என்ன? | DIG Vijayakumar was committed suicide due to OCD and severe depression? What is OCD?


Health

oi-Vignesh Selvaraj

Google Oneindia Tamil News

கோவை: கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் இன்று அதிகாலை துப்பாக்கியால் நெற்றியில் சுட்டுக்கொண்டு பலியான நிலையில், விஜயகுமார் ஓசிடி மற்றும் தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது மருத்துவர் தெரிவித்ததாக கூடுதல் டிஜிபி அருண் தெரிவித்துள்ளார். ஓசிடி பிரச்சனை இவ்வளவு தீவிரமானதா?

கோவையில் தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி விஜயகுமாரின் உடற்கூறாய்வு கோட்டாட்சியர், தடயவியல் துறையினர் முன்னிலையில் நடைபெற்றது. தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி விஜயகுமாரின் உடலுக்கு தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, விஜயகுமாரின் மருத்துவரிடமும் பேசினார் ஏடிஜிபி அருண்.

DIG Vijayakumar was committed suicide due to OCD and severe depression? What is OCD?

பின்னர் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, கடந்த சில ஆண்டுகளாகவே டிஐஜி விஜயகுமார் மனஅழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக டிஐஜி விஜயகுமார் ஓசிடி மற்றும் கடும் மன அழுத்தத்தில் இருந்தார் என அவரது மருத்துவர் சொன்னார். மன அழுத்தம் காரணமாகவே விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

ஓசிடி பிரச்சனை: ஓசிடி (Obsessive-compulsive disorder) என்பது, மீண்டும் மீண்டும் ஒன்றைச் செய்ய வேண்டும் அல்லது சிந்திக்க வேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்தும் எண்ணம் ஆகும். ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்தல், ஒரே விஷயத்தைப் பற்றி தேவையில்லாமல் தொடர்ந்து யோசித்துக் கொண்டிருப்பது, அதன் காரணமாக மன அழுத்தம் ஏற்படுவது ஓசிடி பிரச்சனைகள் இருப்பவர்கள் சந்திக்கும் தீவிர பிரச்சனைகள் ஆகும்.

இதுவும் ஒரு வகையான நரம்பியல் குறைபாடே. மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது உடலின் இயற்கையான வேதியியல் மாற்றம் ஓசிடி பிரச்சனையை உருவாக்கலாம். மன அழுத்தம் அல்லது அதிர்ச்சிகரமான வாழ்க்கை நிகழ்வுகள் ஓசிடிக்கு காரணமாகின்றன. மிகைப்படுத்தப்பட்ட எண்ணங்களால் உண்டாகும் ஓசிடி, பயம், கோபம், எரிச்சல், பதட்டம் உள்ளிட்டவற்றை தீவிரமாக ஏற்படுத்துகிறது.

தீவிர சந்தேகம்: சாதாரணமாக, வீட்டு கதவை பூட்டினோமா என்ற சந்தேகம் ஏற்படுவதுபோல, ஓசிடி பிரச்சனை தீவிரமாக இருப்பவர்களுக்கு வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகும், வீட்டு கதவை பூட்டினோமோ? கேஸ் சிலிண்டரை அணைத்தோமா, டிவியை அணைத்தோமா என்பது போன்ற சந்தேகங்கள் தீவிரமாக எழும்.

சுத்தம் குறித்த அதீத பயம் ஏற்படும். கையால் எந்தப் பொருளையும் தொட பயப்படுவார்கள், அடிக்கடி கைகளை கழுவிக் கொண்டிருப்பார்கள். வீட்டில் இருக்கும் மற்றவர்களும் தன்னைப்போலவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள், இதனால், தேவையற்ற சச்சரவுகள் ஏற்படக்கூடும்.

DIG Vijayakumar was committed suicide due to OCD and severe depression? What is OCD?

மிகையான சிந்தனை: திடீரென தேவையற்ற விஷயங்களை மிகவும் சீரியசாக சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். பைக் ஓட்டிக்கொண்டு செல்லும்போதே, வழியில் எங்காவது சவ ஊர்வலத்தைப் பார்த்தால், நமக்கோ நமக்கு நெருக்கமானவர்களுக்கோ உடனே மரணம் நடந்து விடுமோ என்று பயம் ஏற்பட்டு அது பற்றி சிந்திக்கத் தொடங்கி விடுவார்கள்.

ஓசிடி காரணமாக, சில விஷயங்களில் தங்களுக்கென ஒரு ஆழ்மன நம்பிக்கையை வளர்த்துக் கொள்வார்கள். செருப்பை அணியும்போது 2 முறை கழற்றிவிட்டு மூன்றாவது முறையாக அணிய வேண்டும், எப்போதுமே 5 மடக்குகள் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும், ஒரு செயலை ஒரு முறை செய்துவிட்டால், அத்னை ஏழு முறை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும் என்பது போன்ற சிந்தனைகள் அழுத்தம் கொடுக்கும்.

 டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது ஏன்? மனைவி, மகளிடம் போலீசார் விசாரணை! டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது ஏன்? மனைவி, மகளிடம் போலீசார் விசாரணை!

ஆலோசனை அவசியம்: இதனால், ஒவ்வொரு செயலிலும் அதிக நேரம் எடுக்கும். இது மற்ற அன்றாட வேலைகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும். இப்படி செய்வது முட்டாள்தனம் என்று அறிந்தும் அல்லது செய்ய விரும்பாவிட்டாலும், அவற்றைச் செய்வதை நிறுத்த அவர் சக்தியற்றவராக உணரலாம். ஓசிடி பிரச்சனை இருப்பதாக உணர்பவர்கள் நம்பிக்கையான நபர்களிடம் விளக்கி, மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

மனநல ஆலோசனைகள், ஓசிடியை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அதன் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சைகள் தேவைப்படலாம். தீவிரத்தைப் பொறுத்து மூளையில் உள்ள செரட்டோனின் என்ற வேதிப்பொருள் பற்றாக்குறையை போக்கும் மருந்துகளும் தரப்படலாம். இது எளிதாக கட்டுப்படுத்தக்கூடிய வியாதிதான். மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் சில நாட்களிலேயே ஓசிடி பிரச்சினை உள்ளவர்களின் நெகட்டிவ் எண்ணங்கள் மறைந்து வாழ்க்கை வசந்தமாக மாறிவிடும். மெத்தனம் இல்லாத, தொடர் சிகிச்சை மட்டுமே அவசியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

English summary

It has been revealed that Coimbatore DIG Vijayakumar was committed suicide due to who was suffering from OCD and severe depression. Is OCD really that serious?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *