Friday, December 8, 2023
Health

நண்டு நண்டு.. பலரும் அறியாத “அந்த” ரகசியம்.. நண்டு எடுத்தா இப்படி செஞ்சு பாருங்க.. மருத்துவ ஆச்சரியம் | Health Amazing benefits of Crab and what are the Crab Medicinal uses


Health

oi-Hemavandhana

Google Oneindia Tamil News

சென்னை: கடல் உணவுகள் என்றாலே, சத்துக்கள் நிறைந்ததாக பார்க்கப்படுகிறது. அதில் மிக முக்கியமானது நண்டு வகைகள் ஆகும். அந்த அளவுக்கு ஆரோக்கியம் நண்டிற்குள் உள்ளது.

100கிராம் நண்டு இறைச்சியில், 59மிகி கால்சியம், 1.5கிராம் கொழுப்பு , 19 கிராம் புரதம், 29IU வைட்டமின் ஏ, 7.6 மிகி வைட்டமின் சி, 9.78 மைகி வைட்டமின் பி 12 ஆகியவை நிறைந்திருக்கின்றன. ஆனால், கொழுப்பின் அளவோ, வெறும் 1.5 கிராம் அளவு மட்டுமே இருக்கிறது..

Health Amazing benefits of Crab and what are the Crab Medicinal uses

எப்படி நடக்கும்: நண்டுகளிலேயே மிகவும் புகழ்பெற்றது ஜப்பானின் சிலந்தி நண்டுதான்.. உலகில் உள்ள எல்லாப் பிராணிகளும் முன் பக்கமாகவே நடக்கும்.. பக்கவாட்டில் நடக்கும் ஒரே உயிரினம் நண்டு மட்டுமே…. இதற்கு கடினமான ஓடுகள் இருக்கும். .ஆனால், இந்த கடின ஓட்டுடன் வளர முடியாது.. அதனால், வருடந்தோறும் ஓட்டை கழற்றிவிடும். புது ஓடு உருவாகிக் கொண்டிருக்கும்போதே, பழைய ஓட்டை கழற்றிவிடும்.

தெளிவான பார்வை: அதேபோல, எதிரிகளிடம் சிக்கிவிட்டால், உடல் உறுப்பை துண்டித்துவிட்டு தப்பித்துவிடுமாம்.. ஆனால், மறுபடியும் அந்த உறுப்புகள் நண்டுக்கு வளர்ந்துவிடுமாம். அசுத்தமான கடல்நீரில்கூட நண்டுகளால் தெளிவாக பார்க்க முடியுமாம்..

நண்டு சாப்பிடுவதன் மூலம் மனிதர்களின் நடவடிக்கையில் மாறுபாடுகள் ஏற்படும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள்.. காரணம், உடலில் உள்ள திசுக்கள் மற்றும் செல்களில் ஏற்படும் சேதத்தினை தடுக்க இதில் உள்ள செலீனியம் சத்து உதவுகிறது

Health Amazing benefits of Crab and what are the Crab Medicinal uses

உடல் எடை: அதுமட்டுமல்ல, உடல் எடையை குறைக்கக் கூடியவர்கள், நண்டு உணவை அதிகம் சேர்த்து கொள்வார்கள்.. இதில், வைட்டமின் A உள்ளதால், கண்பார்வைக்கு பெரும் நன்மை தருகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம், செலெனியம், தாமிரம் இப்படி எல்லாமே நண்டுக்குள் உள்ளது.. இத்தகைய இதய நோயாளிகளுக்கு நண்டு இறைச்சி நல்ல ஒரு உணவாக அறியப்படுகிறது.மூளை சிறப்பாக செயல்படவும், நரம்பு மண்டலம் செயல்பாடுகளுக்கும் இந்த நண்டு உதவி செய்கிறது..

எலும்பு தேய்மான பிரச்சனை உள்ளவர்களுக்கு அருமருந்து இந்த நண்டுகள்.. அவ்வளவும் கால்சியம் நிறைந்துள்ளன.. ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, சிறுநீரக செயல்பாட்டுக்கும் உதவி புரிகிறது. நண்டில் குரோமியம் அதிகம் உள்ளதால், ரத்த சர்க்கரை அளவு, இன்சுலின் அளவு ஆகியவற்றை குறைக்கவும், டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் இன்சுலின் அளவை சீரான நிலையில் பராமரிக்கவும் உதவுகிறது..

காயங்கள்: காயங்கள் சீக்கிரமாக குணமாக நண்டு உதவுகிறது.. முடக்குவாதம் வராமல் தடுக்கும்.. இந்த நண்டில் உள்ள கனிமங்கள் தம்பதிகளின் செக்ஸ் ஹார்மோன்களைத் தூண்டுவதற்கு பெரிதும் உதவுவதாகவும் சொல்கிறார்கள். ஆனால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் குறைந்த அளவே நண்டினை எடுத்துக் கொள்ள வேண்டும்.. கர்ப்பிணிகள் நண்டு சாப்பிடக்கூடாது என்பார்கள்.. அதனால் மருத்துவரை கலந்தோசித்துவிட்டு உணவில் சேர்த்து கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை: எப்போது நண்டு வாங்கினாலும், உயிருள்ள நண்டுகளை வாங்குவதுதான் நல்லது என்கிறார்கள்.. நண்டின் மேலுள்ள ஓடு, நன்றாக தடிமனாக இருக்க வேண்டுமாம்..

நண்டினை எண்ணெயில் வறுக்காமலும், பொறிக்காமலும், சூப், குழம்பு, மசாலா, வறுவல் செய்து சாப்பிட்டால், முழுமையான ஊட்டச்சத்து நமக்கு கிடைக்கும். அதுமட்டுமல்ல, இது உடலுக்கு சூடு கொடுக்கும் என்பதால், மழைக்காலங்களில் தாராளமாக எடுத்து கொள்ளலாம்.. சளித்தொல்லை இருக்கும்போது, நண்டு சூப் வைத்து குடித்தால், நிவாரணம் கிடைக்கும்.

நண்டு சுத்தம் செய்த பிறகு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பூண்டு, மஞ்சள், தக்காளி சேர்த்து சூப் போன்று நன்கு கொதிக்க வைத்து சாப்பிட்டால், ஜலதோஷம், நெஞ்சு சளி காணாமல் போகும்.. அல்லது நண்டு ரசம் செய்து சாப்பிடலாம்.

நண்டு ரசம்: சீரகம், சோம்பு இரண்டையும் நீர் விட்டு அரைத்து வைத்துகொண்டு, மிளகு, பூண்டு இரண்டையும் அரைகுறையாக தட்டி வைத்து கொள்ள வேண்டும்.. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரைத்து வைத்திருக்கும் சோம்பு, சீரகத்தைத் தேவையான அளவு தண்ணீர் விட்டுக்கரைத்து, துளி மஞ்சள் பொடி சேர்த்து, புளியையும் சேர்த்து மொத்தமாக கரைத்து கொள்ள வேண்டும்.

இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயை தாளித்த, வெங்காயம், தக்காளியையும் போட்டு நன்றாக வதக்க வேண்டும். பிறகு, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்க்க வேண்டும். 2 நிமிடம் கழித்து, நண்டு கால்களை அதில் எடுத்து போட்டு, கால்கள் வெந்து, சிவந்த நிறமாகும் சமயத்தில், தேங்காய்ப் பால் ஊற்றிக் கிண்டி, இறக்கினால் நண்டு ரசம் ரெடி. இது அவ்வளவும் உடலுக்கு வலு சேர்க்கும்.

மகத்துவம்: மட்டன் சிக்கன் உணவுகளை விட கடல் உணவுகளில் சத்துக்கள் அதிகம் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.. அதில் இந்த நண்டு மிக முக்கியமானது..!!

English summary

Health Amazing benefits of Crab and what are the Crab Medicinal uses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *