Tuesday, October 8, 2024
Health

“கருவாடு” சாப்பிட்டால் “அதை” செய்யாதீங்க.. அவ்ளோதான்..அதென்ன கருவாட்டு ரசம்? வியப்பூட்டும் பால்சுறா | Health Benefits of Dry Fish and Do you know which food to avoid if you eat Dry Fish


Health

oi-Hemavandhana

Google Oneindia Tamil News

சென்னை: கருவாடுக்குள் எத்தனையோ நன்மைகள் இருந்தாலும், பெரும்பாலானோர் அதை விரும்புவதில்லை.. நன்மைகள் பலவிருந்தாலும், கருவாடுடன் சேர்த்து சில உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டி உள்ளது.

தமிழர்களின் உணவில், கருவாடுக்கு ஒரு ஸ்பெஷல் இடம் எப்போதுமே உண்டு.. ஆனால், ஏனோ, மீனை உணவில் சேர்த்து கொள்ளும் அளவுக்கு கருவாடை சேர்த்து கொள்வதில்லை.. ஒருவேளை அதன் வாடை காரணமாக இருக்கலாம்.. அல்லது அதன் சுவை சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். எனினும், நிறைய மருத்துவ நன்மைகளை இந்த கருவாடுகள் ஒளித்து வைத்து கொண்டுள்ளன.

Health Benefits of Dry Fish and Do you know which food to avoid if you eat Dry Fish

அசைவ உணவுகளிலேயே, அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு இந்த கருவாடுதான்… 80-85 சதவீதம் வரை புரதம் இந்த கருவாடில் உள்ளது. இதை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். கருவாடுகளில் ஆண்டிஆக்ஸிடன்ட் அதிகமாக காணப்படுவதால், இருமல் மற்றும் சளி உள்ளவர்களுக்கு கருவாட்டு குழம்பு சிறந்த மருந்தாகும். உடல் நலம் குன்றியவர்கள் கருவாட்டுக் குழம்பினை எடுத்துக் கொண்டால், உடல் நலம் தேறுவார்கள்.

தீர்வுகள்: சளித் தொல்லை, இருமல் பிரச்சினை உள்ளவர்கள் கருவாட்டுச் சாறு சிறந்த மருந்தாகும்… கருவாடு சாப்பிடுவதால், பூச்சிகளை அகற்றும்.. கருவாடு எலும்பு மற்றும் பற்களை உறுதிப்படுத்துகிறது.

கொடுவா கருவாடு: பெண்களுக்கு அருமருந்தாவது இந்த கருவாடுதான். நீர்ப்பை, சினைப்பை, கருப்பை பிரச்சினைகளைச் சரி செய்ய உதவுகிறது.. பிரசவித்த பெண்களுக்கு பால் சுரக்க வேண்டுமானால், பால் சுறா கருவாடு போல சிறந்த தீர்வு வேறு கிடையாது.. இதுபோலவே திருக்கைமீன் கருவாடிலும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. கொடுவா கருவாடு வாங்கி குழம்பு வைத்தால், அதுவே பலருக்கு மருந்தாகிவிடும்.. காரணம், கொடுவாமீனை விட கொடுவா கருவாடில்தான் சத்துக்கள் அதிகம் உள்ளது..

அதுபோலவே, கெளுத்தி மீனைவிட, உப்பங் கெளுத்திக்கருவாட்டில்தான் சத்து அதிகம்.. சீலா மீனைவிட, சீலா கருவாடுதான் சத்து அதிகம்.. இறால் கருவாடை அடிக்கடி உணவில் பயன்படுத்தினால், ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது.. வாய்வுப் பிடிப்பு, பசிமந்தம், மூட்டுவலி, அரிப்பு, வயிறுஉப்புசம், போன்றவற்றிலிருந்தும் விடுபடலாம்.. இன்னும் ஏராளமான கருவாடுகள் இருக்கின்றன.. ஆனால், எல்லா கருவாடுமே நன்மை தரக்கூடியதுதான்.

சைனஸ்: ஆனால், எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்கும் நாட்களில் மீன், நண்டு, இறால், தயிர், மோர் சாப்பிடக்கூடாது என்பார்கள்.. இந்த லிஸ்ட்டில் கருவாடும் அடக்கம்.. சைனஸ் தொல்லை, சளி இருமல், ஆஸ்துமா தொல்லை இருப்பவர்கள், தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்த அன்று இவைகளை சாப்பிட்டால் சைனஸ் பிரச்சனை அதிகமாகுமாம்.

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அதிகமாக இருப்பவர்கள், உப்பு அதிகமாக சேர்க்கக்கூடாது.. கருவாட்டில் ஏற்கனவே உப்பு மிக அதிகமாக இருககும் என்பதால், இந்த பிரச்சனை இருப்பவர்கள் கருவாட்டை தவிர்த்து விடுவது நல்லது.. அதேபோல, சருமநோய் அல்லது அலர்ஜி இருப்பவர்களும் கருவாட்டை தவிர்க்கலாம்.. சரும பிரச்சனை இருக்கும்போது, கருவாட்டையும் சாப்பிட்டால், உடலில் நமைச்சல், அரிப்பு அதிகம் ஏற்படும்..

Health Benefits of Dry Fish and Do you know which food to avoid if you eat Dry Fish

கருவாட்டு ரசம்: கருவாடு சமைக்கும்போது, அதில் மிளகு பூண்டு, சீரகம், திப்பிலி போன்ற மூலிகை உணவுப்பொருட்களை சேர்த்து சமைத்தால் ஆரோக்கியமானதாக இருக்கும். இதை கருவாட்டு சாறு என்பார்கள்.. பார்க்க ரசம் போலவே இருக்கும்.. இதையே மேலும் சில பொருட்களை சேர்த்து ரசம் வைப்பார்கள்.. இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி, ஆகியவற்றை நன்றாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் தக்காளி சேர்த்து லேசாக அரைத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், அரைத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து வதக்கிவிட்டு, சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சேர்க்க வேண்டும். ஒரு தக்காளி, வெக்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி போடவும். பிறகு மிளகாய் தூள், தனியா தூள் முதலியவற்றை சேர்த்து நன்கு 2 நிமிடங்கள் வதக்கி, புளி தண்ணீர் கொஞ்சம் அதிகமகவே சேர்த்து ஊற்ற வேண்டும்.

அஜீரணம்: கடைசியாக சுத்தம் செய்த கருவாட்டு துண்டுகளை போட வேண்டும். கறிவேப்பிலை, கொத்தமல்லியை இறக்கி தூவினால், கருவாட்டு ரசம் ரெடி. இதை சாப்பிடும்போது, அஜீரணக் கோளாறு, மந்தம், பசியின்மைக்கு மிகசிறந்த நிவாரணமாக விளங்குகிறது. எப்போதுமே தவிர்க்க வேண்டிய அளவுக்கு கருவாடு சத்துகுறைந்த உணவு கிடையாது.. வாரம் ஒருமுறையாவது சாப்பிடலாம்..!!

English summary

Health Benefits of Dry Fish and Do you know which food to avoid if you eat Dry Fish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *