Saturday, September 23, 2023
Health

“மயோசிடிஸ்”.. சமந்தாவை வாரி சுருட்டிய “மையோசைடிஸ்” பயங்கர நோய்.. இந்த அறிகுறி இருக்கா? ஜாக்ரதை மக்களே | Health Famous Actress Samantha is diagnosed with Myositis and Emergency in Peru Country


Health

oi-Hemavandhana

Google Oneindia Tamil News

சென்னை: பிரபல நடிகை சமந்தாவுக்கு ஏற்பட்டுள்ள நோய், ஒட்டுமொத்த ஒரு நாட்டுக்கும் ஏற்பட்டு கடுமையான பாதிப்பை தந்து வருகிறது.. அது எந்த நாடு? இதன் நோயின் தாக்கங்கள் என்னென்ன?

ஆரம்பத்தில் நடிகை சமந்தா, “பாலிமார்பஸ் லைட் எரப்ஷன்” என்ற தோல் நோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாக சொன்னார்.. அதிக வெளிச்சத்தில் நடித்ததால், தோல் பகுதியில் ஒவ்வாமை ஏற்பட்டதாகவும், இதற்காக வெளிநாடு சென்று சிகிச்சைகளை தாம் எடுத்து கொண்டதாகவும் கூறினார்.

Health Famous Actress Samantha is diagnosed with Myositis and Emergency in Peru Country

நடிகை சமந்தா: ஆனால், அதற்கு பிறகுதான், “மயோசிடிஸ்” என்ற தசை திசைவு நோய் பாதிப்பு தனக்கு இருப்பது தெரியவந்தது என்றார். சமந்தாவுக்கு ஏதோ உடலில் பிரச்சனை என்று மீடியாக்களில் செய்திகள் வந்தபோதுதான், “மயோசிடிஸ்” என்ற பெயரையே பெரும்பாலானோர் கேள்விப்பட்டனர்.

இத்தனைக்கும் சமந்தா கடுமையான உடற்பயிற்சியை செய்யும் பழக்கம் கொண்டவர்.. அப்படியிருந்தும் அவருக்கு இப்படி ஒரு நோயா? என்று பலரும் அதிர்ந்து போனார்கள்.. ஒருகட்டத்தில், உடற்பயிற்சியை செய்ய முடியாத அளவுக்கு ஆளானார்.

தசைகள்: சில மாதங்களுக்கு முன்பு சமந்தா இந்த நோயினால் தான் பட்ட கஷ்டம் குறித்து, அழுதுகொண்டே ஒரு பேட்டி தந்திருந்தார். அதில், “என்னுடைய தசைகள் பயங்கர வலியை தந்தன.. எலும்புகள் பலவீனமாகி நான் சோர்ந்துவிட்டேன்.. சில நாட்களில் படுக்கையில் இருந்து எழக்கூட முடியவில்லை.. கடுமையான ஒற்றைத் தலைவலி ஏற்பட்டது.. ஒரு நாள் குண்டாகவும் ஒரு நாள் ஒல்லியாகவும் இருக்கிறேன். கண்களில் வீங்கி, ஊசி குத்துவது போல இருக்கிறது” என்று கூறியிருந்தார்.

அதென்ன மயோசிடிஸ்? இது ஒரு அரிய வகை நோய். பொதுவாக இது எல்லாரையும் பாதிப்பதில்லை. எப்போதாவது, எங்காவது ஒருவருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்படும்.

பலவீனமாகிவிடும்: மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோய் என்பது, தசைகளில் ஏற்படும் வீக்கம் ஆகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபரின் உடல் தசைகள் மீது நோயெதிர்ப்பு அமைப்பு நடத்தும் தாக்குதலால் தசைகள் பாதிப்படையும். இது நாட்கள் செல்ல செல்ல தசைகளை வீக்கமடைய வைக்கிறது. இந்த வீக்கமானது கடைசியில் தசைகளை பலவீனமாக்கிவிடும். மயோசிடிஸ் என்பது எலும்புகளை இணைக்கக்கூடிய தசைகளை தாக்கும் மயோபதி நோயாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு, தோல் பகுதியில் இந்த நோய் பாதிப்பு உண்டாகும் என்கிறார்கள்.. இது பொதுவாக கைகள் மற்றும் தோள்கள், கால்கள், இடுப்பு, வயிறு மற்றும் முதுகுத்தண்டில் உள்ள தசைகளை பாதிக்கிறது.இந்த நோய் எலும்புகளை இணைக்கும் தசைகளை தாக்கக்கூடியதாகும்… இந்த நோய் எதனால் ஏற்படுகிறது என்ற உறுதியான காரணம் தெரியவில்லை. ஆனால், சுற்றுச்சூழல் மற்றும் மரபணு இந்த நோய் ஏற்பட முக்கிய காரணமாகிறது.

சிவப்பு பட்டைகள்: தோல் பகுதிகளில் சிவப்பு பட்டையாக தடிப்புகள் வந்தால், இந்த நோய் தாக்கம் இருக்க அதிக வாய்ப்பு உண்டு. கண்களை சுற்றிலும் கரு வளையம் ஏற்படுவது போல, சிவப்பு தடிப்புகள் ஏற்பட்டால், மயோசிடிஸ் நோய் தாக்கமாக இருக்கலாம் என்கிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் ஏற்படும் மூட்டு வலி, வைரஸ் தாக்கத்தால் ஏற்படும் நோய்கள் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவோருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது..

கழுத்து, தொடை, தோள்பட்டை, இடுப்பு போன்ற தசை பகுதிகள் இருக்கும் இடங்களில், “மயோசிடிஸ்” தாக்கக்கூடுமாம்.. ஆனால், இது தொற்று நோய் வகை கிடையாது. தொடர்ச்சியான எடை குறைவு, மூட்டு வலி, அதிக சோர்வு இருக்குமானால், சிவப்பு பட்டை தடிப்புகளும் உடலில் ஏற்பட்டால், உடனே பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

உடல் எடை குறைவு: சிலசமயம் கை, கால்களில் ஏற்படும் கூச்ச உணர்வு, பேசுவதில், விழுங்குவதில் சிரமமாக உணர்வது, இதய துடிப்பு வழக்கத்திற்கு மாறாக அதிகரிப்பது, மூச்சு விடுவதில் சிரமம், தசைகளில் பலவீனம், செரிமான கோளாறு, சிறுநீரை அடக்குவதில் ஏற்படும் சிக்கல்கள் இதெல்லாம்கூட இந்த நோயின் அறிகுறிகளாகும்.

இது முகம், மார்பு, கழுத்து, முதுகில் ஊதா நிறத்தினாலான தடிப்புகளை ஏற்படுத்தும். உடல் எடை குறையும்.. இந்த நோய் பெண்களை விட அதிகமான ஆண்களை பாதிக்கிறது. அதிலும், 50 வயதிற்கு மேற்பட்டவர்களை பாதிக்கிறதாம்..

டெஸ்ட்கள்: ரத்த பரிசோதனை, “எலக்ட்ரோமையோகிராபி, திசுக்கள் சோதனை, நெஞ்சக எக்ஸ் ரே, மேமோகிராம்” போன்ற டெஸ்ட்களை செய்து, மயோசிடிஸ் பாதிப்பு உள்ளதாக என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த நோய் பாதித்தால், உடம்பில் உள்ள சக்தி மொத்தமாக போய்விடும்.. நடக்கவும் முடியாது, கீழே உட்கார்ந்தாலும் எழுந்திருக்க முடியாது.. ஆரம்பக்கட்டத்திலேயே இந்த நோயை கண்டறிந்தால் குணப்படுத்திவிடலாம்..

பெரும்பாலும் IVIG மருந்து மூலமாக இந்த நோய் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறிப்பாக, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் விதமாக இந்த மருந்து செயல்படுவதாக சொல்கிறார்கள்.. இதற்கு ஸ்டீராய்டு போன்றவை தவிர்க்கப்படுகிறது என்றாலும், தனியார் மருத்துவமனையில் கட்டணம் அதிகம் ஆகுமாம்.. இந்த நோய் பாதித்தவர்கள் குணம் அடைவதற்கு சில மாதங்கள் வரை எடுத்துக் கொள்கிறது. அரசு மருத்துவமனைகளில் இந்த நோய்க்கு இலவச சிகிச்சையுடன் மருந்துகளும் இலவசமாக கிடைக்கின்றன.

உடல்வலி: எனினும், மக்களிடேயே மயோசிடிஸ் நோய் குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிறார்கள். உடல்வலி என்று நினைத்து சாதாரணமாக இருந்துவிடக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

இப்போது விஷயம் என்னவென்றால், சமந்தாவுக்கு வந்ததைபோல, ஒரு நாடு முழுக்க இந்த நோய் வந்துள்ளது.. பெரு நாட்டில், குய்லின்-பார் சிண்ட்ரோம்(Guillain-Barre syndrome) என்ற அரிய வகை நோய் பரவல் அதிகரித்துள்ளது…

உயிரிழப்புகள்: உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலமே ( immune system) நரம்புகளை தாக்க தொடங்க ஆரம்பித்துவிட்டது.. அதிலும், வயதானவர்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் இந்த நோயின் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், இதுவரை 165 பேருக்கு இந்த குய்லின் பார் சிண்ட்ரோம் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.. இதுவரை 4 பேர் உயிரிழந்துவிட்டனர்.. இதனால் நோயின் தீவிர தன்மையை உணர்ந்த பெரு, 90 நாட்களுக்கு சுகாதார நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது.

English summary

Health Famous Actress Samantha is diagnosed with Myositis and Emergency in Peru Country

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *