Friday, December 8, 2023
Health

“பச்ச பீன்ஸ்”.. வெயிட் லாஸூக்கு சூப்பர் சாய்ஸ்.. பீன்ஸூக்குள்ளே இப்படி ஒரு சீக்ரெட் தெரியாம போச்சே | Beans Health Benefits and Do you know Amazing Health Vegetable Green Beans is good for the heart


Health

oi-Hemavandhana

Google Oneindia Tamil News

சென்னை: உடல் எடையை குறைக்க விரும்பினால், அதற்கு முதல் சாய்ஸ் பீன்ஸ்தான்.. காய்கறிகளில் தவிர்க்க முடியாத உணவுதான் இந்த பீன்ஸ்.

பீன்ஸ் என்றாலே அது நிறைய வகைகள் உண்டு.. கறுப்பு பீன்ஸ், கிட்னி பீன்ஸ், நேவி பீன்ஸ், பின்டோ பீன்ஸ், சோயா பீன்ஸ், டபுள் பீன்ஸ் இப்படி எத்தனையோ உண்டு..

நார்ச்சத்து: ஆனால், பச்சை பீன்ஸில், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டின், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், பொட்டாசியம், காப்பர், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மக்னீசியம் இன்னும் ஏராளமான சத்துக்கள் அடங்கி உள்ளன..

Beans Health Benefits and Do you know Amazing Health Vegetable Green Beans is good for the heart

கொழுப்பு குறைவாக உள்ள பீன்ஸில், நார்ச்சத்துக்களும், புரோட்டீன்களும் அளவுக்கு அதிகமாக இருக்கின்றன.. 100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்தானது 9% சதவீதம் உள்ளது. அதனால்தான், உடல் எடையை குறைக்க இது மிகச்சிறந்த உணவாக தேர்வு செய்யப்படுகிறது. இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் பசியெடுக்காது.. ஜீரணி சக்தியும் அதிகரிக்கும்.. தசைகளின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். கொழுப்புக்கள் குறைவாக இருப்பதால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை தடுப்பதுடன், இதயத்தையும் காக்கிறது.

நார்ச்சத்துக்கள்: கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் என இரண்டு இந்த பீன்ஸில் உண்டு.. கொழுப்பின் அளவை குறைத்து, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவது பீன்ஸிலுள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்களாகும்.. குடல் இயக்கங்களை ஊக்குவித்து, மலச்சிக்கலை தடுப்பது, கரையாத நார்ச்சத்துக்கள் ஆகும்.

பீன்ஸில் போலேட் என்ற கருவில் வளரும் சிசுவிற்கு தேவையான வைட்டமின் அடங்கியுள்ளால், கர்ப்பிணிகள் இதனை கட்டாயம் சாப்பிட வேண்டும் என்பார்கள்.

மூலநோய்: அடிக்கடி தவறாமல் பீன்ஸ் சாப்பிட்டு வந்தால், நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் முற்றிலும் குறைந்துவிடும் என்கிறார்கள்.. மூலநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுஒரு சிறந்த உணவாகும். அதேபோல, புற்று நோயை குணப்படுத்துவதில், பீன்ஸின் பங்கு அதிகமாகவே உள்ளது.

பீன்ஸில் உள்ள சிலிகான் என்ற கனிமச்சத்து, எலும்புகளை வலுவாக்கிறது.. இதிலுள்ள பீட்டா கரோட்டீன் சருமத்தை பாதுகாப்பதுடன், முதுமையை எதிர்த்து போராடுகிறது.. தலைமுடிக்கும் பீன்ஸ் மிகவும் நல்லது. பலவீனமான தலைமுடிகள் உடைய நேர்ந்தால், அவசியம் பீன்ஸ் சாப்பிட வேண்டும்..

நீரிழிவு: நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோயினால் உண்டான பாதிப்புகள் குறையும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதில் பீன்ஸ் பெரும்பங்கு வகிக்கிறது.. காரணம், இதிலுள்ள கார்போஹைட்ரேட் உடலில் மெதுவாக கரைவதால், ரத்தத்தில் சர்க்கரை சேர்வதை கணிசமாக தடுத்து நிறுத்துகிறது.. சிறுநீரக கல் பிரச்சினை இருப்பவர்கள் தாராளமாக பீன்ஸ் சாப்பிட வேண்டும்..

பீன்ஸில் மெக்னீசியம் உள்ளதால், இதயத்துக்கு நல்லது.. இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தி, ரத்த நாளங்களை தளர்த்த பீன்ஸ் உதவுகிறது.. தோல்களுக்கு சிறந்த பாதுகாவலன் இந்த பீன்ஸ்.

English summary

Beans Health Benefits and Do you know Amazing Health Vegetable Green Beans is good for the heart

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *