HT Temple SPL: நோய் நொடியில்லாத வாழ்வளிக்கும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலின் சிறப்புகள்!-history of very ancient rameshwaram ramanatha swamy temple
பாண்டியர்கள் காலத்திலும் மற்ற பிற மன்னர்கள் ஆட்சி காலத்திலும், ராமநாதபுரத்தை ஆட்சி புரிந்த சேதுபதி மன்னர்கள் ஆட்சியின் போதும் இக்கோயில் நன்கு சீர்திருத்தி கட்ட்டப்பட்டது. இந்தியாவிலேயே 690 அடி நீளமும், 435 அடி அகலமும், 1212 தூண்களும் கொண்ட பிரகாரம் இக்கோயி சிறப்பாகும். இந்தியாவிலிருக்கும் 12 ஜோதிர்லிங்கங்களில் இதுவும் ஒன்று. காசிக்கு யாத்திரை சென்றவர்கள், ராமேஸ்வரத்துக்கு வந்து ராமநாத சுவாமியைத் தரிசித்தால்தான் காசி யாத்திரை முழுமையடைகிறது. இப்படி ராமேஸ்வரத்தின் சிறப்புகள் அதிகம்.