சௌ சௌ.. சௌகரியம் கரும் சௌசௌ.. கொழுகொழு உடம்பை குறைக்க இப்படி செய்யுங்க.. அபூர்வமான சீமை கத்தரிக்காய் | Health Excellent Weight Loss food Chow Chow and Do you know what are the Vitamins in Chow Chow
Health
oi-Hemavandhana
சென்னை: பெங்களூர் கத்திரிக்காய் அல்லது சீமை கத்திரிக்காய் என்று சொல்லப்படுவது சௌசௌ.. ஒரு காயை கண்ணெதிரே தெரிந்தே ஒதுக்குகிறோம் என்றால், அது இந்த சௌசௌதான். இதிலுள்ள மருத்துவ குணங்கள் தெரிந்தால், இனி அப்படி செய்ய மாட்டோம்.
சௌசௌவில் வைட்டமின் A,B,C,K போன்ற சத்துகள் நிரம்பி உள்ளன.. புற்றுநோயை தடுக்கக்கூடிய அத்தனை வைட்டமின்களும் இந்த காயில்தான் உள்ளதாம்..
உயர் ரத்த அழுத்தம்: உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும், நரம்பு தளர்ச்சி பிரச்சனை இருப்பவர்களும் இந்த காயை அதிகமாக எடுத்து கொள்ளலாம்.. கால்சியம் சத்துகள் காணப்படுவதால் எலும்புகளை பலமாக்குகிறது.. இதனால், வளரும் குழந்தைகளுக்கு இந்த சௌசௌ சிறந்த உணவாகும். தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு அருமருந்துதான், இந்த சௌசௌ..
கல்லீரல் பிரச்சனைகள்: சமீபத்தில் விலங்குகளை வைத்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், கல்லீரல் கொழுப்பு சேர்வதற்கு எதிராக செள செள ஜூஸ் செயல்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அந்தவகையில், சௌசௌ இருந்தால், கொழுப்பு கல்லீரல் நோயை ஈஸியாக விரட்டலாம். அதுமட்டுமல்ல, சௌசௌ சாப்பிட்டு வந்தால், வயிறு தொடர்பான எல்லா பிரச்சனைகளும்.. முக்கியமாக மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்..
பெருங்குடல், சிறுகுடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கி குடல் மூலம் உருவாகக்கூடிய அனைத்து தொந்தரவுகளையும் சௌசௌ சீர்செய்யும்.. கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கை, கால்களில் ஏற்படும் வீக்கத்தை, குறைக்க இந்த சௌசௌ பயன்படுகிறது.. அதேபோல, இளம்வயதிலேயே முகத்தில் சுருக்கம் வந்துவிட்டால், சௌசௌவை தாராளமாக சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
சௌசௌ உணவு: 100 கிராம் சௌ சௌவில் 17.8% கார்போஹைட்ரேட், 10.7% ஸ்டார்ச், 10.5% போலேட் சத்து, 5.4% புரதசத்து, 6.7% சுண்ணாம்பு சத்து, 4.8% பாஸ்பரஸ், 9% மாங்கனீசு போன்ற சத்துகள் அடங்கியுள்ளது. அப்படியானால், இந்த சௌசௌ யார் யாருக்கு பேருதவி புரிகிறது தெரியுமா?
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த காய் பெரும் கை கொடுத்து உதவுகிறது. உடலில் உள்ள கொழுப்புகளை குறைப்பதில், சௌசௌ அதிக பயன்தருகிறது.. சிறுநீரக பிரச்சனை உருவாகாமால் தடுத்து நிறுத்துகிறது.
கொழுப்புகள்: குறிப்பாக, வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் தேங்கியிருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடுகிறது.. மேலும் மிகமிக குறைந்த கலோரிகளும், மிக மிக அதிக நார்ச்சத்தும் கொண்டிருக்கிறது. டயட் இருப்பவர்களுக்கு இந்த 2 பண்பும்தானே ரொம்ப முக்கியமாக தேவைப்படுகிறது. அதனால், வெயிட் லாஸுக்கு, சௌசௌ சாப்பிடுவதை முயற்சி செய்து பார்க்கலாம்.
சௌசௌவை வேகவைத்து உப்பு, மிளகு, தண்ணீர் சேர்த்து சூப் செய்து காலை, மாலை வேளையில் உணவிற்கு முன் இதை பருகலாம். இந்த சௌசௌவில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் சமைத்தவுடன் மிகவும் மென்மையாக சுவையாக மாறுகிறது. இதன் தோல் பகுதி மற்றும் உள்ளிருக்கும் கொட்டையை நீக்கிவிட்டு இதனை சமைக்கலாம்.
நீர்ச்சத்து: அதுமட்டுமல்ல, சௌசௌவில் நீர்ச்சத்து அதிகம் என்பதால், வேகவைக்கப்பட்ட உடனேயே மென்மையாக சுவையாக மாறிவிவிடுகிறது..
இந்த சௌசௌவில் கூட்டு, பொரியல், சட்னி, துவையல், குழம்பு இப்படி நிறைய செய்வார்கள்.. ஆனால், தோல், மற்றும் அதன் உள்ளிருக்கும் கொட்டையை நீக்கிவிட்டு சமைக்க வேண்டும். சமைத்த உடனேயே சாப்பிட்டு விட வேண்டும். சிலர் இதனை சாலட்களில் பயன்படுத்துவார்கள்.. சிலர் இதனை ஜூஸில் கூட சேர்த்துக்கொள்வார்கள். சிலர் இதில் பஜ்ஜி செய்வார்கள்.. சிலர் இந்த காயை வைத்து மோர்குழம்பு செய்வார்கள். அல்லது நிறைய தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, சீரகம், மிளகு தாளித்து கஞ்சி போல் செய்தும் குடிக்கலாம்.
English summary
Health Excellent Weight Loss food Chow Chow and Do you know what are the Vitamins in Chow Chow