Actress Kushboo: நொறுங்கி விழுந்த மார்க்கெட்.. தூங்கம் தொலைத்து திரிந்த அர்ஜூன்.. இரவு கண்விழித்து காப்பாறிய குஷ்பு!-actress kushboo stands up in support of arjun sarja shared by bayilvan ranganathan interview
தன்னுடைய முதல் படத்தில் அவருடன் நடித்ததால் குஷ்புவிற்கு அர்ஜூன் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டு. அர்ஜூன் கிட்டத்தட்ட 40, 50 படங்கள் நடித்தார். ஆனால் அதன் பின்னர்அவருக்கு சரியான படங்கள் எதுவும் அமையவில்லை. அவர் நடித்த படங்களும் பெரிதாக கை கொடுக்கவில்லை. அவரது மார்க்கெட் மொத்தமாக விழுந்துவிட்டது. இதனையடுத்து தான் அவர் சேவகன் என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கினார். இதற்கான பைனான்ஸ் தொகையை சில கொடுக்க முன்வரும்பொழுது, அவர்கள் குஷ்பு கதாநாயகியாக நடித்தால் நாங்கள் பைனான்ஸ் செய்கிறோம் என்று கண்டிஷன் போட்டார்கள்.