Saturday, July 20, 2024
National

Pune: உடல் முழுவதும் வெடிகுண்டு உள்ளது! விமான நிலையத்தில் பீதி கிளப்பிய மூதாட்டி மீது வழக்குப்பதிவு-72yearold woman booked for bomb hoax at pune airport


குர்கானை சேர்ந்த நிதா பிரகாஷ் கிரிபலானி என்கிற மூதாட்டி உள்ளூர் விமான முனையத்தில் சோதனை சாவடிக்கு சென்றபோது, திடீரென தனது உடலில் வெடிகுண்டு இருப்பதாக கூறி பீதி கிளிப்பியுள்ளார். இதனால் அங்கிருந்த பயணிகள் அச்சமடைந்த நிலையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் நிலைமை புரிந்து கொண்டு உடனடி பாதுகாப்பு நெறிமுறைகளை மேற்கொண்டனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு மூதாட்டி அருகே இருந்த பயணிகள், விமான நிலைய பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *