Tuesday, October 8, 2024
World

சந்திரயான்-3 வெற்றி | இஸ்ரோவை வாழ்த்திய சுந்தர் பிச்சை – ரிப்ளை செய்த எலான் மஸ்க் | Chandrayaan 3 mission success Sundar pichai congrats ISRO Elon Musk replied


சான் பிரான்சிஸ்கோ: நிலவின் தென் துருவத்தில் விண்கலனை தரையிறக்கிய முதல் நாடு என்ற சாதனையை படைத்துள்ளது இந்தியா. இஸ்ரோவின் சந்திரயான்-3 மிஷன் வெற்றி பெற்றது இதற்கு காரணம். அந்த வகையில் இஸ்ரோவை எக்ஸ் எனும் ட்விட்டர் தளத்தின் வழியே ட்வீட் செய்து பாராட்டியுள்ளார் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை. அதற்கு எலான் மஸ்க் ரிப்ளை கொடுத்துள்ளார்.

சந்திரயான்-3-ன் விக்ரம் லேண்டர் நேற்று (ஆக. 23) நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. தொடர்ந்து அதிலிருந்த பிரக்யான் ரோவர் வெளியேறி, நிலவின் பரப்பில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. நொடிக்கு 1 சென்டி மீட்டர் என்ற வேகத்தில் ரோவர் உலா வருகிறது. 14 நாட்களுக்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்தியாவின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க மைல்கல் சாதனையை பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரை கொண்டாடி வருகின்றனர். பலரும் இஸ்ரோவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், கூகுளின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, இஸ்ரோவுக்கு தனது வாழ்த்து தெரிவித்துள்ளார். அதற்கு ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் சுவாரஸ்ய ரிப்ளை கொடுத்துள்ளார்.

“நம்பமுடியாத அற்புத தருணம். இஸ்ரோவுக்கு எனது வாழ்த்துகள். நிலவில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியது. நிலவின் தென் துருவப் பகுதியில் சாஃப்ட் லேண்டிங் செய்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது” என சுந்தர் பிச்சை ட்வீட் செய்துள்ளார். அதற்கு ‘சூப்பர் கூல்’ என மஸ்க் ரிப்ளை கொடுத்துள்ளார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *