Khalistan: டெல்லி மெட்ரோவில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள்! ஜி20 மாநாடு நடக்க உள்ள நிலையில் சர்ச்சை!-ahead of g20 summit delhi metro stations defaced with pro khalistan slogans
அடுத்த மாதம் தேசிய தலைநகரில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் 18 நாட்டு தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பிடன், சீனப் பிரதமர் ஜி ஜின்பிங், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் நடந்த இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.