Saturday, September 23, 2023
Astrology

Marriage: ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி காலத்தில் திருமணம் செய்யலாமா?-can you get married during the seven and half saturn and ashtamath saturn periods


முதலில் ஏழரைச்சனி, அஷ்டமத்துச்சனி நடந்தால் திருமணம் செய்யலாமா எனப் பலருக்கும் கேள்வி எழுவதுண்டு. தற்போது மகர ராசிக்காரர்களுக்குப் பாதச்சனியும், கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்மச்சனியும், மீனராசிக்காரர்களுக்கு விரயச்சனியும் நடந்துகொண்டு இருக்கிறது. கடகராசிக்காரர்களுக்கு அஷ்டமத்துச் சனி நடக்கிறது. ஆக இந்த 4 ராசிக்காரர்களும் கல்யாணம் செய்யக்கூடாதா என்றால், கண்டிப்பாக கல்யாணம் செய்யலாம். உடனே, தங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம், ஏழரைச் சனியின்போது பலரும் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்வார்களே என்று?. ஆனால், பலரது ஜாதகத்தையும் நாம் ஆராய்ந்துபார்த்தால் ஏழரைச்சனி, அஷ்டமத்துச்சனி நடக்கும் காலகட்டங்களில் தான் திருமணம் நடந்திருக்கும். இதுவே ஜோதிட விதி என்பது முக்கியமான விஷயம். எதனால் என்றால், சனி என்பவர் காலப்புருஷ தத்துவத்தின்படி, பதினொன்றாம் பாகத்திற்கு அதிபதி. அவர் உச்சமடையும் ராசி என்றால், துலாம் ராசியில் சனி உச்சம் அடைவார். சனி அனுமதிக்காமல், எந்தவொரு திருமணமும் நடக்காது. அவ்வாறு ஏழரைச் சனிக் காலங்களில் திருமணத்தின்போதோ, அஷ்டமத்துச்சனியின் காலகட்டத்தின்போதோ திருமணம் நடந்தால் விவகாரத்து ஆகிவிடும் எனக்கூறுவது சரியானது அல்ல. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *