HBD Sakshi Malik: ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற மங்கை – காமென்வெல்த் விளையாட்டில் பதக்கம் அள்ளியவர்-sakshi malik becomes first indian female wrestler to win a medal at the olympics
ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்த விளையாட்டில் இந்தியாவுக்காக முதல் முறையாக பதக்கம் வென்ற வீராங்கனை என பெருமையை பெற்றவர் சாக்ஷி மாலிக். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இளம் வீராங்கனையான இவர் 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றார். அதே போல் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற வீராங்கனையாகவும், ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் மூன்று வெண்கலம், ஒரு வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார். காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம், வெண்கலம் வென்றுள்ளார்.