Maharaja Movie First Look: ‘அவங்க 2 பேர்னால தான் நான்’: 50வது பட போஸ்டர் வெளியீட்டு விழாவில் விஜய்சேதுபதி-vijay sethupathi at the 50th movie maharaja poster launch event getting emotional and gives thanksnote
அதில் செய்தியாளர்களிடம் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது, ‘உங்களுடைய பாராட்டுக்கும் கண்டிப்புக்கும் நன்றி. 50 படங்கிறது கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. இது மைல்கல் போன்றது. எவ்வளவு தூரம் வந்திருக்கோம்ங்கிறது ஒரு நம்பிக்கையைத் தருது. கூடவே, அனுபவத்தையும் சேர்த்து தருது. இதில் பொறுமையும் ஞானமும் கிடைச்சிருக்கு. எனக்கு நல்ல அனுபவங்களைக் கொடுத்த இயக்குநர்களுக்கும் கலைஞர்களுக்கும் அனைவருக்கும் நன்றி. நான் மகான் அல்ல படத்தின் டப்பிங் முடிச்சிட்டு, அருள்தாஸ் அண்ணனும் நானும் ஒருத்தொருக்கொருத்தர் செல்போன் நம்பரை பரிமாறிக்கிட்டோம். திடீர்னு ஒரு நாள் ரெண்டு மிஸ்டு கால் இருந்துது. திரும்ப கூப்பிட்டு பேசும்போது, நம்ம நண்பர் சீனு ராமசாமி படம் இயக்குறார். என்ன ரோல் கொடுத்தாலும் படம் பண்ணுனு சொல்லி அனுப்பினார். அப்போது எனக்கும் அவருக்கும் பெரிய பழக்கம்கூட இல்லை. அதன்பின், சீனு ராமசாமி சாரை போய் பார்த்தேன். இப்போது இந்த மேடை வரை வந்துட்டேன். நான் இந்த இடத்துல நிக்கிறதுக்கு இரண்டு பேரு காரணம். ரொம்ப நன்றி அருள்தாஸ் அண்ணே. நன்றி சீனு சார். இந்த மொமன்ட்க்கு நன்றி. இப்போது மஹாராஜா படத்துக்கு வருவோம். நட்டி சார், அருள்தாஸ் அண்ணே, சிங்கம்புலி அண்ணே அனைவரும் நல்லாபடியாக நடிச்சிருக்காங்க. அபிராமி, மம்தா இரண்டு பேரும் ரொம்ப நல்லா நடிச்சிக்காங்க. நான் விருமாண்டி படத்தில் இருந்து அபிராமி மேடத்தோட ரசிகன். நீங்க நடிச்ச ரெட் ஆப்பிள் கண்ணத்தோட பாட்டு எனக்குப் பிடிக்கும். நலனோட படத்தில் நடிக்கும்போது, அதை ரெவர் செய்து நடித்தேன். மஹாராஜா பேசும் படமாக இருக்கும். கமெர்ஷியலாகவும் நன்றாகப் போகும். நித்திலன் படம் எழுதும்போதே தயாரிப்பாளருக்கு இரண்டு மடங்கு, மூன்று மடங்கு லாபம் சம்பாதித்து தரும் படமாக எழுதியிருக்கார்.