Top 10 news: நிபா வைரஸ் பரவல், காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் – மேலும் பல முக்கிய செய்திகள்-top 10 news on september 13 2023
- பொங்கல் பண்டிகை அடுத்த ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி பயணம் மேற்கொள்ள திட்டமிடுபவர்களுக்கு இன்று காலை 8 மணி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கவுள்ளது
- கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் வைரஸ் பரவுவதை தடுக்க எல்லையோர மாவட்டங்களின் சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரபடுத்த தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
- காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெறுகிறது. பகல் 12.30 மணிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டுக்கு அடுத்த 15 நாள்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடும்படி காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது
- டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. வரும் 18ஆம் தேதி சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் சூழலில், முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு
- இண்டியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, கூட்டு பிரச்சாரம் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்பு உள்ளது
- டைப் சி சார்ஜிங் போர்ட் வசதியுடன் ஐபோன் 15 போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 79,999 என உள்ளது.நான்கு மாடல் ஐபோன் 15 சீரிஸ் போன்களும், இரண்டு ஆப்பிள் வாட்ச்களும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் இதன் விற்பனை செப்டம்பர் 22 முதல் நடைபெறுகிறது. முன்பதிவு செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்குகிறது
- ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் அனுபவம் இல்லாத கல்லூரி மாணவர்களை தன்னார்வலர்களாக நியமித்ததே அனைத்து விதமான குளறுபடிகளுக்கு காரணம் என நிகழ்ச்சி நடத்திய நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
- ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார் ரவீந்திர ஜடேஜா. 22 விக்கெட்டுகள் எடுத்திருந்த இர்பான் பாதனை வீழ்த்தி 23 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார் ஜடேஜா
- ‘சந்திரமுகி 2’ படத்தின் ‘தோரி போரி’ என்ற பாடலின் லிரிக் விடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பரிக்கா அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட் செய்த தென்ஆப்பரிக்கா 338 ரன்கள் குவித்த நிலையில், இதை சேஸ் செய்த ஆஸ்திரேலியா 227 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: