Ashok Selvan: பெரிய துரைமாறு.. “கருப்பா இருந்தா என்ன இப்ப? – கொதித்தெழுந்த அசோக் செல்வன்!-ashok selvan latest interview about his cinema love marriage colorism keerthi pandian
வெள்ளையாக இருப்பவர்களை பார்த்தால் துரை என்று அழைப்பது, சாதரணமானவனை வேறு மாதிரி பார்ப்பது ரொம்ப தவறு. என்னைப் பொருத்தவரை இரண்டுமே நிறம்தான். எ.காட்டாக சொல்ல வேண்டுமென்றால் ஆங்கிலம் என்பது ஒரு மொழியே தவிர, அது அறிவு கிடையாது. ஆக கருப்பு எப்படியோ அப்படித்தான் இந்த வெள்ளை நிறமும். வெள்ளையாக இருப்பவர்கள் வெள்ளையாகத்தான் எனக்கு பொண்ணு வேண்டும் என்று கேட்டால் எனக்கு மிகவும் கடுப்பாகும். இந்த மாதிரியான ஒரு மைண்ட் செட்டை இந்த சமுதாயத்தின் மீது போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இது மாற வேண்டும்” என்றார்