PM Modi : ‘ஜி20 வெற்றி இந்தியாவுக்கே உரியது.. தனி நபருக்கோ கட்சிக்கோ அல்ல’ – பிரதமர் மோடி!-the success of the g20 is of 140 crore indians it is the success of bharat says pm modi
இதன் பின்னர் மக்களவையில் பிரதமர் மோடி பேசுகையில், “இன்று நீங்கள் ஜி 20 வெற்றியை ஒருமனதாகப் பாராட்டியுள்ளீர்கள். நான் உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜி 20 மாநாட்டின் வெற்றி 140 கோடி குடிமக்களின் வெற்றி. ஜி-20 வெற்றி என்பது எந்த ஒரு தனி நபர் அல்லது கட்சியின் வெற்றி அல்ல. இது நாம் அனைவரும் கொண்டாட வேண்டிய விஷயம்” என்று நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரின் முதல் நாள் மக்களவையில் உரையாற்றியபோது பிரதமர் மோடி கூறினார்.
மேலும் பேசிய அவர், “ஜி20 மாநாட்டால் இந்தியா குறித்த எதிர்மறை எண்ணம் மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஜி20 பதிலளித்துள்ளது. நாட்டின் பன்முக தன்மையை பறைசாற்றுகிறது நாடாளுமன்றம். அதிகளவிலான பெண்களின் பங்களிப்பு இந்த நாடாளுமன்றத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய இடமாக நாடாளுமன்றம் இருக்கும்.