காசா, லெபனான், சிரியாவிலிருந்து மும்முனை தாக்குதலை சந்திக்கும் இஸ்ரேல்
காசா: காசா, லெபனான் மற்றும் சிரியாவிலிருந்து மும்முனை தாக்குதலை இஸ்ரேல் எதிர்கொள் கிறது. காசாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி ராக்கெட் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தினர். அதன் பின் இஸ்ரேலின் தென் பகுதியில் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை சுட்டுக் கொன்று பலரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேலிய விமானப்படை காசா நகரில் குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டது. இந்தப் போரில் இஸ்ரேல் தரப்பில் உயிரிழப்பு 1,200 ஆக வும், காசா பகுதியில் உயிரிழப்பு 900-மாகவும் அதிகரித்துள்ளது. இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் தீவிரவாதிகள் 1,500 பேரை சுட்டுக் கொன்றுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. காசா பகுதியில் இஸ்ரேல் விமனப்படை நேற்று முன்தினம் இரவு நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் இதுவரை உயிரிழப்பு 3,600-ஐ நெருங்கியுள்ளது.