Saturday, July 20, 2024
National

Forbes India: ரூ.9,431 கோடி சொத்துக்களுடன் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் நுழைந்த தமிழர்!-who is kp ramasamy entrant to forbes india rich list with crores of wealth


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி நாட்டிலேயே மிகப் பெரிய பணக்காரராக உள்ளார். ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பணக்கார இந்தியர்கள் பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்டது. கௌதம் அதானி இரண்டாவது இடத்திலும், ஷிவ் நாடார் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

பணக்கார இந்தியர்களில், ஜவுளி மற்றும் சர்க்கரை உற்பத்தியாளர் கேபிஆர் மில் நிறுவனர் மற்றும் தலைவர் கே.பி.ராமசாமி, இப்பட்டியலில் புதிதாக நுழைந்துள்ளார். ஜவுளி அதிபர் தற்போது 2.3 பில்லியன் டாலர் (ரூ. 9,143 கோடி) சொத்து மதிப்புடன் 100வது இடத்தில் உள்ளார்.

மேலும் படிக்க: 

தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் கே.பி.ராமசாமியைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள் இங்கே.

1. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ராமசாமி, 1984ல் கேபிஆர் ஆலையை நிறுவினார். 2013ல் சர்க்கரை உற்பத்தியை விரிவுபடுத்தி, 2019ல் ஆண்களுக்கான இன்னர்வேர் பிராண்டான ஃபாசோவை விற்பனை செய்யத் தொடங்கினார். ராமசாமி மற்றும் அவரது இரு சகோதரர்களால் நடத்தப்படும் நிறுவனத்தில், 30,000 பேர் பணியாற்றுகின்றனர். இதில் 90% பெண்கள்.

2. தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் அமைந்துள்ள ராமசாமியின் கேபிஆர் மில், சர்க்கரை மற்றும் எத்தனால் உற்பத்திக்கு கூடுதலாக பின்னப்பட்ட ஆடைகள், பருத்தி மற்றும் பாலியஸ்டர் நூல்களை உற்பத்தி செய்கிறது.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *