Hindu: ’நான் ஒரு இந்து!’ அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் விவேக் ராமசாமி பேச்சு!-vivek ramaswamy shares insights on hindu faith and beliefs
இந்து மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை குறித்து பேசிய இவேக் ராமசாமி, “நான் கிறிஸ்டியன் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றேன், நாங்கள் என்ன கற்றுக்கொள்கிறோம்? நாங்கள் 10 கட்டளைகளைக் கற்றுக்கொண்டோம், நாங்கள் பைபிள் படித்தோம், வேத வகுப்புகள், கடவுள் உண்மையானவர், உண்மையான கடவுள் ஒருவர் இருக்கிறார், உங்கள் பெற்றோரை மதியுங்கள். பொய் சொல்லாதீர்கள், திருடாதீர்கள், விபச்சாரம் செய்யாதீர்கள் உள்ளிட்ட விழுமியங்களை கற்றுக் கொண்டேன். இவை கிறிஸ்தவர்களுக்கோ, இந்துக்களுக்கோ சொந்தமானவை அல்ல, உண்மையில் கடவுளுக்கு சொந்தமானவர்கள் என கூறினார்.