Friday, December 8, 2023
World

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் நிகரகுவாவின் ஷெய்னிஸ் பலாசியோஸ்! | nicaragua nation s Sheynnis Palacios crowned Miss Universe 2023 title


சான் சால்வடோர்: மிஸ் யுனிவர்ஸ் 2023 பட்டத்தை வென்றுள்ளார் 23 வயதான ஷெய்னிஸ் பலாசியோஸ். இவர் மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவா நாட்டை சேர்ந்தவர். அந்த நாட்டின் சார்பில் சர்வதேச அளவில் அழகிப் போட்டியில் முதல் முறையாக பட்டம் வென்றவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

72-வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி எல் சால்வடாரின் சான் சால்வடாரில் உள்ள ஜோஸ் அடோல்போ பினெடா அரங்கில் நடைபெற்றது. இதில் தாய்லாந்து அழகி அன்டோனியோ போர்சில்ட் முதல் ரன்னர் அப் ஆகவும், ஆஸ்திரேலிய அழகி மொராயா வில்சன் இரண்டாவது ரன்னர் அப் ஆகவும் தேர்வானார்கள்.

இந்த நிகழ்வில் மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்வான ஷெய்னிஸ் பலாசியோஸுக்கு கடந்த ஆண்டு பட்டம் வென்ற அமெரிக்காவின் ஆர்’போனி கேப்ரியல் முடிசூட்டினார். பட்டம் வென்ற தேர்வான ஷெய்னிஸ் ஆடியோவிஷுவல் புரொடியூசராக செயல்பட்டு வருகிறது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *