IT Raid : ஒடிசா, ஜார்கண்டில் வருமான வரித்துறை சோதனை- ரூ.300 கோடி பறிமுதல்!-rs 300 crore seized by income tax sleuths during multiple raids on liquor manufacturers in odisha and jharkhand
ஒடிசாவின் பவுத், ரெய்திஹ், சம்பல்பூர் மற்றும் பலங்கிர் மாவட்டங்களில் அமைந்துள்ள பவுத் டிஸ்டில்லரி பிரைவேட் லிமிடெட் பி.டி.பி.எல் நிறுவனத்தின் வளாகங்கள் மற்றும் ஜார்க்கண்டின் ராஞ்சி மற்றும் லோஹர்தாகாவில் உள்ள நிறுவனத்தின் இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிறுவனம் மாநிலம் முழுவதும் உள்ள விற்பனை நிலையங்கள் மூலம் பில், வவுச்சர்களை பராமரிக்காமல் போலி மதுபானங்களை விற்பனை செய்வதாகவும், அந்த நிறுவனத்தின் வழக்கமான கணக்கு புத்தகங்களில் கணிசமான அளவு பண விற்பனை கணக்கிடப்படவில்லை என்றும் கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.