NayanVigneshShivan: ‘நீங்க ஏன் இதைப் பண்ணமாட்டியுறீங்கன்னு சொல்வார்’ – கணவர் விக்னேஷ் சிவன் பற்றி மனம்திறந்த நயன்தாரா-he will say why dont you do this says nayanthara talking about her husband vignesh shivan
அதில் பேசும் நடிகை நயன்தாரா, ‘’ஒரு விஷயம் சொல்ல மறக்கல. எப்பயுமே நம்ம காதில் விழுற ஒரு விஷயம், ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாடி இருக்கிறாங்கன்னு சொல்றது. ரொம்ப Rareஆ பார்த்த விசயம். நான் அந்த மாதிரி பார்த்தது இல்ல. இன்னிக்கு வெற்றிகரமாக இருக்கிற எல்லா பெண்களும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிற எல்லா பெண்களுக்கும் பின்னாடி, கண்டிப்பா ஒரு ஆண் இருக்கிறார். ஏன் லைஃபில் நான் செய்கிற ஒவ்வொரு விஷயத்துக்குப் பின்னாடியும், சினிமா தவிர, ஏன்னா சினிமா நிறைய வருஷமா செஞ்சிருக்கேன்.